தமிழ்நாடு முழுவதும் மாட்டு பொங்கல் பண்டிகை இன்று கோலாகலம்.. மக்கள் சிறப்பு வழிபாடு..!

0
0
தமிழ்நாடு முழுவதும் மாட்டு பொங்கல் பண்டிகை இன்று கோலாகலம்.. மக்கள் சிறப்பு வழிபாடு..!Chennai oi-Hemavandhana
Revealed: Saturday, January 15, 2022, 7:29 [IST]
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயத்தில் உழவர்களுக்கு பக்கபலமாக நின்ற மற்ற உயிரினங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, குறிப்பாக கால்நடைகளை வழிபடும் பொருட்டு கொண்டாடப்படுவதே இந்த மாட்டுப் பொங்கலின் சிறப்பு அம்சமாகும். தைத்திருநாள் பொங்கல் பண்டிகை நேற்றைய தினம் தமிழகமெங்கும் களை கட்டியது.. மக்கள் வீடுகளில் பொங்கல் வைத்து உழவர்களுக்கு நன்றி சொல்லி இத்திருநாளை கொண்டாடினர். காக்கி சட்டைக்கு லீவு.. கண்ணை பறிக்கும் ரோஸ் கலர் சட்டை, புடவை! போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல்! உற்சாகம் உழவர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் 2-ம்நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.. அதன்படி, விவசாயத்துக்கு உறுதுணைக விவசாயிகளின் குடும்பத்தின் கால்நடைகளுக்கும், உழவுக்கு உதவும் மாடுகளுக்கும், பால் சுரக்கும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதற்காக, முன்னதாகவே, விவசாயிகள் தங்கள் உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்துவிடுவார்கள்.. இன்று அதிகாலையிலேயே தங்கள் வீடுகளில் உள்ள பசுக்கள், காளைகள் குளிப்பாட்டப்பட்டு சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன. பிறகு சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் செய்யப்பட்டு அவற்றுடன் செங்கரும்பு, பழவகைகள் ஆகியவை மாடுகளுக்கு படையலிடப்பட்டு வழிபாடு நடத்திய பிறகு, வழிபாட்டுப் பொருட்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன.. பூஜைகள் முடித்தபிறகு, வண்ணம் பூசிய கொம்புகளுக்கு மணியை கட்டிவிட்டு ஊர்வலமாக அதை கொண்டு செல்லவும் உள்ளனர். மேலும் இன்று காலையிலேயே சிவாலயங்களுக்குச் சென்று நந்தி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. உணவு மாலை, பண மாலை, பூ மாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை, பழ மாலை என எல்லா விதமான மாலைகளையும் சூட்டி நந்தியை அலங்கரித்த நிலையில், மக்கள் திரண்டு வந்து தரிசித்து வருகின்றனர்.. மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள உறவை போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நிகழ்வு பல்வேறு இடங்களில் துவங்கி உள்ளது. இதைதவிர, ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் இன்று கோலாகலமாக நடத்தப்படுகின்றன.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Permit Notifications
You might have already subscribed English abstract
Pongal competition in Tamilnadu and the second day celebrations Mattu pongal
Story first printed: Saturday, January 15, 2022, 7:29 [IST]Supply hyperlink

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.